Skip to content

என் வாழ்க்கை பயணம் மக்களுக்கானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை என் போராட்டம் தொடரும். குரலற்றவர்களின் சுதந்திரம், உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கான சமத்துவம், விலக்கப்பட்டவர்களுக்கான ஒன்றுபட்ட சகோதரத்துவம் என்பதே நம் இலட்சியம். ஒன்றுசேர்ந்து அநீதியை எதிர்ப்போம். நம்பிக்கை மற்றும் ஒற்றுமையான வருங்காலத்தைப் படைப்போம்.

த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மை - பொதுச்செயலாளர்

நிறுவனர் - வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்

அரசியல் வியூக வல்லுநர்

சமூக சேவகர்

விளையாட்டு திறன் நிர்வாகி

பற்றி

ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா அரசியல் வியூக வல்லுநராகவும் சமூக சேவகராகவும் செயற்பட்டு வருகிறார். மேலும், திறன் வாய்ந்த விளையாட்டு நிர்வாகியாகவும் சமத்துவ கருத்தாக்கத்திற்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவராகவும் அறியப்படுகிறார். முன்பு, 'அரைஸ் கேபிட்டல்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராகச் செயலாற்றியவர், தற்போது இந்தியக் கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனம் ஆகிய இரண்டின் தலைவராகவும் தமிழ்நாடு ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். விளையாட்டைத் தாண்டி, மாணவர்கள் மற்றும் ஆர்வமிக்க இளம் தலைமுறையினரை அர்த்தப்பூர்வமான அரசியல் பாதையில் வழிநடத்தும் பொருட்டு 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற மக்கள் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலராக சிறிதுகாலம் பணியாற்றியபின்னர், அந்த பதவியை விடுத்தார்.கல்வியும் விளையாட்டும் சமூகத்தில் மாபெரும் புரட்சிக்கு வழிவகுக்கும் என்பதே ஆதவ் அர்ஜுனாவின் உறுதியான நம்பிக்கையாகும்.

ஆதவ் அர்ஜுனா 12.04.1982 அன்று திருச்சியில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை விவசாயியாக பணியாற்றிய நிலையில், தாயார் நன்கு படித்திருந்த போதிலும் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளை ஏற்றார். வறட்சி மற்றும் குடும்பச் சிக்கல்கள் காரணமாக கெடுவாய்ப்பாக சிறு வயதிலேயே தனது அன்புத் தாயாரை இழந்த இளம் ஆதவ் அர்ஜுனா அவரது மாமா மற்றும் பாட்டியின் அரவணைப்பில்தான் வளர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியை ஒய்.டபள்யூ.சி.ஏ வில் முடித்த இவர், திருச்சி இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும்போது கூடைப்பந்து விளையாட்டில் தனக்கு இயல்பாக உள்ள ஆர்வத்தையும், திறனையும் கண்டறிந்தார். மேல்நிலைக் கல்வியை சிறப்பாக முடித்து, திறன் படிப்புதவித் தொகை கிடைத்து மெரிட்டில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில் பாடத்திட்டத்தையும் தாண்டி வரலாறு, அரசியல், பொருளாதாரம், சமூகவியல், தத்துவம் என தனது வாசிப்பை விசாலமாக்கியதோடு, விளையாட்டிலும் கடுமையாக உழைத்து தனது திறனை மேம்படுத்திக்கொண்டார்.ஒய்.டபள்யூ.சி.ஏ

கூடைப்பந்து விளையாட்டில் ஆதவ் அர்ஜுனா தொட்ட உயரங்களானது அவரது விடாமுயற்சிக்கும், அர்ப்பணிப்புக்கும், ஆழமான பற்றுறுதிக்கும் சான்று பகர்கிறது. 10ஆம் வகுப்பு படிக்கும்போது கூடைப்பந்து விளையாட்டு தனக்கு அறிமுகமான நிலையில், அதில் இயல்பான ஆர்வமும், அதற்கேற்ற உயரமான உடலமைப்பும் தனக்கிருப்பதை அவர் கண்டறிந்ததில் இருந்து அவரது விளையாட்டுப் பயணம் தொடங்கியது. தனது விளையாட்டுத் திறனை மேம்படுத்திக்கொள்வதற்காக திருச்சி பிஎச்எல் மைதானத்தில் இரவு பகல் பாராது கடும் மன உறுதியுடன் அவர் செலுத்திய உழைப்புதான் எதிர்காலத்தில் அவர் தொடவிருந்த உயரங்களுக்கு அடித்தளம் அமைத்தது என்றால் அது மிகையாகாது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையில், ஆதவ் அர்ஜுனா விளையாட்டு வீரர்களுக்கான இட-ஒதுக்கீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) விடுதியில் தங்கி தனது கல்லூரி படிப்பை பயின்றார். தனது வழியில் எத்தனையோ தடைகள் இருந்தபோதிலும் அவை அனைத்தையும் உடைத்து, ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்கள் சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பயிற்சிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனது விடுதி கூடைப்பந்து அணியின் தலைவரானார்.

மாவட்ட, மாநில, தேசிய அளவில் தொடர்ந்து முன்னேறி விளையாட்டுக் களத்தில் பல சாதனைகளை படைத்த திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் 2016ஆம் ஆண்டு வரை தேசிய அளவிலான கூடைப்பந்து வீரராக மிளிர்ந்தார். விளையாட்டுத்துறையின் மேம்பாடு குறித்து தொடர்ந்து சிந்தித்து வந்தவர் 2017ஆம் ஆண்டு விளையாட்டு நிர்வாகியாக தனது வெற்றிக் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுத ஆயத்தமானார்.

இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர்

2023ஆம்‌ ஆண்டு ஆதவ் அர்ஜுனா இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டது அவரது வாழ்வின் முக்கியமான கட்டமாகும். பல முனைகளிலிருந்தும் புதிது புதிதாக முளைத்த தடைகளைத் தாண்டி, கூட்டமைப்பின் ஜனநாயக மாண்பை காத்து நின்றதன் விளைவாக 39 வாக்குகளில், 38 வாக்குகளைப் பெற்று உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்றார்.

05.07.2023 அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் திரு. கிருஷ்ணா பட் அவர்கள் வழங்கிய நியாயமான தீர்ப்பால் நீதி நிலைநாட்டப்பட்டதன் விளைவாக ஆதவ் அர்ஜுனா இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்று வரலாறு படைத்தார்.

அவர் தலைவர் பொறுப்புக்கு வந்தவுடன், எந்தத் தாமதமுமின்றி இந்தியாவில் கூடைப்பந்து விளையாட்டின் மேம்பாட்டிற்காக பல முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டார். முதற்கட்டமாக நமது இந்திய வீரர்களுக்கு விளையாட்டுக்கான ஊட்டச்சத்து குறித்த தெளிவும், சர்வதேச சூழல் குறித்த புரிதலும் ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு வெளிநாட்டு பயிற்சியாளரின் தலைமையில் தேசிய அளவிலான சிறப்பு முகாமை நடத்தினார். மேலும் இந்தியாவின் தேசிய அணிக்கென்று பிரத்யேகமாக உடலியக்க நிபுணர்கள், விளையாட்டு உளவியல் நிபுணர்கள், வலிமை மற்றும் பராமரிப்புக்கான நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய உலகத்தரமான குழுவை அமைத்தார். இவையெல்லாம் இதுவரை இந்திய கூடைப்பந்து விளையாட்டில் வேறு யாரும் நினைத்துக் கூட பார்க்காத புதுமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு தேசிய அளவிலான வீரராக இருந்து, விளையாட்டின் நிர்வாகத் தலைமையை ஏற்றதால் வீரர்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அதற்கேற்ப நுட்பமான திட்டங்களை வகுத்துச் செயல்படுகிறார்.

குறைந்த காலத்திலேயே இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராக ஆதவ் அர்ஜுனா வகுத்த வியூகங்களுக்கு தக்க பலன்கள் கிடைத்தன. சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு (FIBA) நடத்தும் 16வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 9ஆவது இடத்தையும், 3x3 FIBA 18வயதுக்குட்பட்ட ஆடவருக்கான உலகக் கோப்பைத் தொடரில் 12ஆவது இடத்தையும் பிடித்தது. முத்தாய்ப்பாக 2022ஆம் ஆண்டு 3x3 ஆசிய விளையாட்டில் இந்திய ஆடவர் அணி மலேசியா, மகாவ், சீனா ஆகிய அணிகளை வீழ்த்திய நிலையில், அதே ஆசிய‌ விளையாட்டில் 5x5 போட்டியில் மகளிர் அணி இந்தோனேசியா மற்றும் மங்கோலியாவையும், 3x3 போட்டியில் மலேசியாவையும் வீழ்த்தியது.

எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது தனித்திறமையாலும், சுய ஒழுக்கத்தாலும் கூடைப்பந்து விளையாட்டில் உச்சம் தொட்ட ஆதவ் அர்ஜுனா விளையாட்டில் லஞ்சம், சிபாரிசு ஆகியவற்றை அறவே வெறுத்து அவற்றை முற்றிலும் ஒழிப்பதற்கான பணியில் இறங்கினார். இத்தகைய அறம் சார்ந்த நிர்வாக முன்னெடுப்புகளை பாராட்டி அவருக்கு 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஊடக நிறுவனமான ஆனந்த விகடனின் 'நம்பிக்கை விருது' வழங்கப்பட்டது.

நிறுவனர் - வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்

ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பயணம், டாக்டர் பி ஆர் அம்பேத்கர், பெரியார், மார்ட்டின் லூதர் கிங், அண்ணா, ஆபிரஹாம் லிங்கன், மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய சிந்தனைத் தலைவர்கள் காட்டிய பாதையில் உருவாக்கப்பட்டது. பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எளிமையாகத் தேர்தல் வெற்றியின் மூலம் நடைமுறைப்படுத்தினார் அண்ணா. இதன் தீவிர தாக்கத்திற்கு ஆளான அர்ஜுனா 'தேர்தல் அரசியலே சமத்துவ கருத்துகளை அமல்படுத்தும் களம்' என்ற முடிவுக்கு வந்தடைந்தார்.

2015-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பங்களிப்பாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் அர்ஜுனா. 2019-ம் ஆண்டில் தேர்தல் தகவல் பகுப்பாய்வு மற்றும் பிரச்சார வியூகங்களை வகுக்கும் 'ஒன் மைண்ட் இந்தியா' நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு தேர்தல் பிரச்சார களத்தை நவீனப்படுத்திட பிரஷாந்த் கிஷோரை அழைத்து வந்து, மாநிலத்தின் தேர்தல் முறையை மறுசீரமைப்பு செய்ய ஐ-பாக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இவர்களின் வியூகம் 2021-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. அதன்பின், அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்துகொடுத்து ஏற்றதாழ்வு இல்லா சமத்துவ சமூகத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அரசியலை முன்வைத்து One Mind India நிறுவனம் Voice of Commons என்கிற மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் 2022-ம் ஆண்டு வாய்ஸ் ஆஃப் காமென்ஸ் நிறுவனம் கைகோர்த்தது. முதலில் கட்சி நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் துவங்கி, டிஜிட்டல் முறையில் தரவுகளை கையாள தனி டாஸ்போர்ட் கொண்டுவரப்பட்டது. பெரிய கட்சிகளுக்கு இணையாக 15 ஆயிரம் வாக்குச் சாவடி முகவர்களுடன் பூத் கமிட்டி கூட்டம் ஒரு மாநாடுப் போல் சென்னையில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத் திருச்சி சிறுகனுாரில் இந்தியா கூட்டணியின் முதல் மாநாடாகவே அறியப்பட்ட விசிக-வின் ‘வெல்லும் சனநாயகம் மாநாடு' இந்திய அரசியலுக்கே திருப்புமுனையாக மாறியது. அந்த மாநாட்டை கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி முன்னின்று நடத்தியது 'Voice of Commons' நிறுவனம். மாநாட்டு மேடையிலேயே அர்ஜுனாவைப் பாராட்டினார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். அதேமேடையில், கட்சியின் அதிகாரப்பூர்வ உறுப்பினராகவும் இணைந்தார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து, ஆதவ் அர்ஜுனா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உயர்த்தப்பட்டார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டிஜிட்டல் வடிவ பிரச்சாரத்திற்கு அடித்தளமிட்ட 'Voice of Commons' முதன்முறையாக QR வடிவ பிரச்சார யுக்தியைத் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தது. இந்த தேர்தலின் வெற்றிக்குப் பிறகு விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி நச்சு சாராயத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிறகு விசிக சார்பாக மது ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்தவர், உளுந்தூர்பேட்டையில் நடந்த 'மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு' மாநாட்டில் முக்கிய பங்களிப்பைச் செய்தார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவனின் நீண்டநாள் லட்சிய முழக்கமான 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்பதை அரசியல் களத்தில் மீண்டும் ஒலிக்கச் செய்ததில் அர்ஜுனாவின் பங்கு முக்கியம் பெறுகிறது. ஆதவ் அர்ஜுனா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகினாலும், தொல். திருமாவளவன் அவர்களின் சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் அதிகாரம், மதப் பெரும்பான்மைவாத எதிர்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடுகள் ஆகிய கருத்தியல் திட்டங்களில் இணைந்து பயணிப்பதாக அறிவித்தார்.

மக்கள் பிரச்சனைகளில் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் ஆதவ் அர்ஜுனா கருத்துக்களைத் தெரிவித்தது கட்சிக்குள் முரண்களை ஏற்படுத்தியது. சமூக பிரச்சனைகளுக்கு எதிரான அவரது நியாயமான கோபம், எதிர்ப்பையும் இணக்கமற்ற சூழலையும் உருவாக்கியது. அது, வலிமையான பிரச்சாரம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தடையாகத் தோன்றியதால் கட்சியிலிருந்து விலக முடிவெடுத்தார். கட்சி பொறுப்பு உட்படச் சம்பந்தப்பட்ட அனைத்திலிருந்தும் வெளியேறினார். ஆனாலும், சமூக முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் குரல்களைப் பிரதிபலிக்கும் சமூக இலட்சியத்தில் என்றும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராகவே செயற்பட்டார். நீதியை நிலைநாட்ட 'அதிகாரத்தை நோக்கி கேள்வி கேளுங்கள்' என்ற டாக்டர். அம்பேத்கரால் ஊக்கம்பெற்றார். அனைவருக்குமான மற்றும் நியாயமான அரசியல் சூழலை உருவாக்க, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரமாகச் செயற்பட முடிவெடுத்தார்.

டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் கொள்கைகளை ஆழமாகக் கொண்டிருந்த 'தமிழக வெற்றிக் கழகம்' ஆதவ் அர்ஜுனாவின் கருத்தியலோடு ஒன்றுபட்டதாக இருந்தது. 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் 'தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கை நிலைப்பாடுகளோடு, வாரிசு அரசியலுக்கு எதிரான அனைவருக்குமான அரசியல் அமைப்பை உருவாக்கும் இலக்கை கொண்டார். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் வியூக நிறுவனமான 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்', தமிழக வெற்றிக் கழகத்தோடு கைகோர்க்கிறது. அக்கட்சிக்கான தேர்தல் வியூக திட்டங்கள் மற்றும் பிரச்சார மேலாண்மையை மேற்கொள்ள இருக்கிறது. இந்த கூட்டணி, கள ஆய்வு மற்றும் புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான நவீன அணுகுமுறையையும், முன்னேற்றகரமான சமத்துவ சமூகம் என்ற ஆதவ் அர்ஜுனாவின் லட்சியப் பார்வையையும் கொண்டு பயணிக்கும். இந்த முன்னெடுப்பின் மூலம், வலிமையான சமூக மாற்றத்தை ஏற்படுத்த, நீதி மற்றும் பிரதிநிதித்துவ மதிப்புகளை நிலைநாட்டும் பயணத்தை ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

பதிவுகள்

இந்தியாவின் தலைசிறந்த அறிஞரும் அரசியலமைப்பு சட்ட மாமேதையுமான டாக்டர். அம்பேத்கரின் சமூக போராட்டங்களைப் பற்றியும், அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர் அல்ல, மாறாக ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதையும் உணர்த்த வேண்டியது அவசியமான பணி. அம்பேத்கரின் வாழ்வு, அரசியல் சிறப்புகள், சமூக உரிமை போராட்டங்கள் என அனைத்தையும் உள்ளடக்கி இந்தியாவில் உள்ள தலைசிறந்த அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், தலைவர்களின் பங்களிப்போடு முதன்முறையாகத் தமிழில் அம்பேத்கர் பற்றிய முழுத் தொகுப்பாக வெளியானது 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல்.

'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' நிறுவனமும், பதிப்பு மற்றும் ஊடகத் துறையில் பாரம்பரியமாக இயங்கி வரும் விகடன் குழுமமும் இணைந்து இந்த நூலைத் தயாரித்து வெளியிட்டார்கள். 2024-ம் ஆண்டு அம்பேத்கர் நினைவுநாளான டிசம்பர் 6 அன்று சென்னையில் பிரமாண்டமாக வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அம்பேத்கரைத் தனது கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அறிவித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். அம்பேத்கர் குடும்ப உறுப்பினரும் இந்தியாவின் தலைசிறந்த அறிஞருமான ஆனந்த் டெல்டும்டே மற்றும் மேனாள் நீதிநாயகம் சந்துரு ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரின் கருத்துரைகளும் பார்வையாளர்களுக்கு அபாரமான சிந்தனையைத் தூண்டின.

அறிவுத்துறையில் மைல்கல்லாக அமைந்த இந்த நிகழ்வோடு, சமூக நீதி மற்றும் எளிய மக்கள் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் இலட்சியத் திட்டங்களில் அம்பேத்கரின் கருத்தியல் துணையோடு கொள்கை பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.

விளையாட்டு வீரராக இருந்த காலத்திலேயே தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேட்டை அனுபவப்பூர்வமாக நன்கு உணர்ந்தவராக இருந்த ஆதவ் அர்ஜுனா அவற்றை சீர்திருத்தும் லட்சியத்தோடு சங்கத் தேர்தலில் 2017ஆம்‌ ஆண்டில் களமிறங்கி தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது சீறிய‌ தலைமையாலும், இடைவிடாத உழைப்பாலும் கொரோனா கொடுந்தொற்று காலத்தில் கூட சங்கத்தின் செயற்பாடுகளில் சுணக்கம் ஏற்பாடாத வண்ணம் துடிப்போடு செயலாற்றி மாநிலம் தழுவிய அளவில் நிர்வாகிகளிடையே நன்மதிப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சங்கத் தேர்தலில் மகத்தான வென்று தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டிற்குள்ளும், மாநில எல்லைகளைக் கடந்தும் கூடைப்பந்து விளையாட்டின் மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கான பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். உதாரணமாக, போட்டித் தொடர்களுக்கான பரிசுத்தொகையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பன்மடங்கு உயர்த்தினார். ஊரக அளவில்கூட வீரர்களுக்கு தரமான ஊட்டச்சத்து கிடைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தினார். தேசிய அளவில் எத்தனையோ விளையாட்டுகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகையில் இன்றளவும் பெரிய வேறுபாடுகள் நீடிக்கும் நிலையில், பாலின சமத்துவத்தில் ஆழமான பற்றுக்கொண்ட ஆதவ் அர்ஜுனா அந்த சமத்துவமற்ற நிலையை மாற்றி, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் நடத்தும் போட்டிகளில் ஆடவருக்கும், மகளிருக்கும் சமமான பரிசுத்தொகையை நடைமுறைப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக வழக்கமாக போட்டிக்காக பேருந்திலும், ரயிலிலும் பயணம் மேற்கொண்டு வந்த தமிழ்நாட்டு‌ வீரர்களை முதன்முதலாக தனது சொந்த செலவில் விமானத்தில் பயணிக்கும் சூழலை உருவாக்கினார். இதன்‌மூலம் நமது வீரர்கள் பயணக் களைப்பின்றி போட்டிகளில் முழு ஆற்றலை வெளிப்படுத்தும் நிலை ஏற்பட்டது.

அர்ஜுனா தமிழகத்தில் மாநிலக்கழகக் குழுவுக்காக ஒரு செர்பிய வெளிநாட்டு பயிற்சியாளரை முதன்முதலாக நியமித்தவர் ஆவார். இதனால் கூடைப்பந்துப் பயிற்சியின் தரத்தை உயர்த்த விரும்பும் அவரது அக்கறை வெளிப்பட்டது. மேலும், அவர் விளையாடும் வீரர்களுக்கான முழுமையான மருத்துவக் காப்பீட்டை அறிமுகப்படுத்தினார் மற்றும் போட்டிகளை மிகுந்த திட்டமிட்டத்தனத்துடனும் திறம்படவும் நடத்தினார். அர்ஜுனாவின் தலைமையில், அவரது சொந்த நிதியிலேயே, மொத்தம் 9 சம்பியன்ஷிப்புகள் நடத்தப்பட்டன, அதில் 5 போட்டிகள் சென்னை நகரில் நடைபெற்றன. இதற்குப் பிறகு, தமிழக ஆண்கள் குழு முதல்முறையாக சொந்த மாநிலத்தில் தங்கப்பதக்கம் வென்றது; அதே சமயம், பெண்கள் குழு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

அர்ஜுனாவின் வழிநடத்தலில் இந்தியாவின் கூடைப்பந்து அணிகள் தாக்கமான செயல்திறனை வெளிப்படுத்தின. பயிற்சியாளர்களின் செயல்திறனை ஊக்குவிக்கும் புதிய முயற்சியாக, 73வது சினியர் நாட்டு அளவிலான கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளின் பயிற்சியாளர்களுக்கு கார்களை பரிசாக வழங்கினார். இது பயிற்சியாளர்கள் மேம்பட்ட பயிற்சியை வழங்க ஊக்கமளித்தது.

2021ஆம் ஆண்டு ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ்நாட்டின் விளையாட்டுக் கலாச்சாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும்‌ நோக்கத்தோடு 2024 ஜூன் மாதம் தமிழ்நாடு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ‌திட்டமிடலில் ஈடுபட்டு வருகிறார்.

என்றாவது ஒரு நாள் இந்தியா ஒலிம்பிக் போட்டியில் கூடைப்பந்துக்கான தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதும், பிற விளையாட்டுகளிலும்‌ தமிழ்நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் அரங்கில் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டும் என்பதும் இவருடைய லட்சியங்கள் ஆகும்.

சமூக முன்னேற்றத்தில் அனைவரையும் உள்ளடக்கும் பொருட்டு, அனைவருக்குமான வாய்ப்பை வழங்கும் விதமாக 'உழைக்கும் மகளிருக்கு' எந்தவித அடமான ஆவணங்களுமின்றி கடன் வழங்கும் நிறுவனமாக 'அரைஸ்' தொடங்கப்பட்டது.

எளிய மக்களின் சுமுகமான நிலைக்காக இது தொடர்ந்து விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அர்ஜுனாவின் தலைமையின் கீழ் 1500 பணியாளர்களுடன் 150 கிளைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது 'அரைஸ் குழுமம்'. இதன் மூலம், 3.5 இலட்சம் பயனாளர்களுக்கு 3000 கோடி வரை கடனுதவி வழங்கி எண்ணற்ற மக்கள் வாழ்வில் முன்னேற்றகரமான தாக்கம் செலுத்தியது அரைஸ்.

'நாட்டில் வறுமையின் காரணமாக எந்தவொரு பெண்ணின் வாழ்வும் சிதைந்துவிடக்கூடாது' என்ற எண்ணமே இந்த நிறுவனம் தொடங்குவதற்காக உந்துதல்.

அரசியல் பயணத்தில் முழு கவனம் செலுத்துவதற்காக 2024-ம் ஆண்டு 'அரைஸ்' குழுமப் பொறுப்புகளிலிருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா. அவரின் சமூகப் பொறுப்புடன் கூடிய தொழில்முனைவாளர் ஈடுபாடு பல மக்களின் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

Arjuna was born on April in Trichy town in Tamil Nadu, India. His mother, Kalyani, received a good education. After marriage, she supported her husband by engaging in agricultural work, while his father, Rajendran, worked as a farmer. Tragically, when Arjuna was just 5 years old, a harsh drought swept through their agricultural fields, plunging them into poverty and leading to the untimely loss of his beloved mother. This heartbreak ignited a fire within Arjuna, propelling him toward a path of entrepreneurship and aiding rural women with financial support. It also fueled his desire to study political science, driven by a desire to enact policy changes in India.

The next turning point in his life was when he lost his friend, a fellow sports player at the SDAT hostel, who couldn't secure financial support as a player. This event motivated Arjuna to pursue sports administration, ensuring that players receive the financial support they need. Arjuna's childhood was marked by visits to the library, which were the only respite from their humble surroundings. Balancing roles across politics, sports, and business, Arjuna perceives society's interconnectedness. He believes sports promote unity, business fosters prosperity, and politics shape policy-making. Arjuna advocates for sophisticated resources for athletes to excel and bring national acclaim, directing his philanthropic efforts towards sports development.

His hobbies include reading books and delving into electoral votes and policy formulation. His lifelong passion for basketball underscores his journey from childhood to the present.

கொரோனா நிதியுதவி: 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி: இயற்கை பேரிடரால் மக்கள் தாங்கொணாத துயரத்தில் அல்லல்படும் நெருக்கடியான நேரங்களில் அர்ஜுனா அவர்கள் களத்தில் இறங்கி தஞ்சை, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

கொரோனா தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு: கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிக்கு துணைபுரியும் வகையில் அர்ஜுனா தனது சொந்த செலவில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான இலவச தடுப்பூசி முகாமை நடத்தினார். இதன்மூலம் 500-600 விளையாட்டு வீரர்கள் பயனடைந்தனர்.

இயற்கை பேரிடர் உதவிகள்: 2015 வெள்ளத்தின்போது ஆதவ் அர்ஜுனா சாந்தோம் பள்ளிக்கு தேவையான பொருட்களையும், கல்விக்கான உபகரணங்களையும் வழங்கினார்.

கணினிக் கூடம் உருவாக்கம்: திருச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு புதிய கணினிக் கூடத்தை அமைக்க அர்ஜுனா உதவியதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தினார்.

பிறந்தநாளன்று உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி: ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய பிள்ளைகளுக்கு காலணிகள் உள்ளிட்ட பொருட்களை அர்ஜுனா வழங்குவதன் மூலம் அந்த இளம் பிஞ்சுகள் மீது அவருக்குள்ள அன்பையும், அக்கறையையும் பறைசாற்றுகிறார்.

கல்வி உதவித்தொகை: ஒருவரின் வாழ்க்கையை மாற்றுவதில் கல்விக்கு உள்ள சக்தியை உணர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா ஏராளமான மாணவர்களின் கல்விக்கான செலவு முழுவதையும் ஏற்றிருக்கிறார்.

நன்கொடை மற்றும் நிதியுதவி: அர்ஜுனா அவர்கள் புத்தகக் கண்காட்சியின் போது தமிழ்நாடு சிறைத்துறைக்கு புத்தகங்கள் அன்பளிப்பு, காயமடைந்த விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரியங்களுக்கு நன்கொடை அளித்து சமூக நன்மைக்கு துணை நிற்கிறார்.

அவரது வருமானத்தின் கணிசமான பகுதி நமது நாட்டில் கூடைப்பந்து விளையாட்டின் மேம்பாட்டிற்காக செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலவரிசை: ஆதவ் அர்ஜுனாவின்
வாழ்க்கை மற்றும் சாதனைகள்

2000

விளையாட்டுத் திறனுக்கான ஊக்கத்தொகை உதவியுடன் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் அரசியல்-அறிவியல் படிப்பில் இணைந்தார். 'தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (Sports Development Authority of Tamil Nadu - SDAT) ஹாஸ்டலில் தங்கி, கூடைப்பந்து விளையாட்டில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார்.

2016

கிராம பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் 'அரைஸ் கேபிட்டல்ஸ்' ( ARISE Investments and Capital Pvt Ltd) தொடங்கப்பட்டது. விளையாட்டு நிர்வாகத்தில் முழுமையாகக் கவனம் செல்லும் பொருட்டு 'தேசிய கூடைப்பந்து வீரர்' நிலையிலிருந்து ஓய்வு பெற்றார்.

2017

தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைப்பிற்குள் இருக்கும் பிரச்சனைகளைச் சீரமைக்கத் தொடங்கினார்.

2019

தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைப்பிற்குள் இருக்கும் பிரச்சனைகளைச் சீரமைக்கத் தொடங்கினார்.

2021

தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் என்ற உயர்ந்த பொறுப்புக்குத் தேர்வானார். தமிழ்நாடு ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

2022

சிறப்பான விளையாட்டு நிர்வாகத்திற்காக ஆனந்த விகடனின் 'நம்பிக்கை விருதை' பெற்றார். ‘கலாட்டா கிரவுன் விருதுகள் - 2022’ சார்பாக 'சிறந்த விளையாட்டு அடையாளமாக' கௌரவிக்கப்பட்டார்.

2023

ஜூலை 5, 2023 அன்று இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் ( Basketball Federation of India - BFI) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளிநாட்டுப் பயிற்சியாளர்களோடு தேசிய அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தியது உட்பட, விளையாடுபவர்களின் ஊட்டச்சத்தில் கவனம், FIBA மற்றும் ஆசிய விளையாட்டுகளில் சிறந்த சாதனைகள் எனக் குறிப்பிடத்தக்கச் சீர்திருத்தங்களைச் செய்தார்.

2024

அரசியலில் கவனம் செலுத்துவதற்காக 'அரைஸ் குழுமத்தின்' அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகினார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின், துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுத் திறம்பட பணியாற்றினார். சட்டமேதை டாக்டர். அம்பத்கர் பற்றிய முழுத் தொகுப்பு நூலான 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூலைப் பதிப்பித்தார். 2024-ம் ஆண்டு டிசம்பர் 6 அன்று அந்த நூல் வெளியிடப்பட்டது. புதிய முன்னெடுப்புகள், சமூகநல திட்டங்கள் மற்றும் வருங்கால அரசியல் திட்டமிடல்களைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகினார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

சிறந்த விளையாட்டு நிர்வாகி

2022ஆம் ஆண்டு விளையாட்டுத்துறையில் அர்ஜுனா அவர்களின் சிறப்பான தலைமைத்துவத்தையும், பங்களிப்பையும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஊடகமான ஆனந்த விகடனின் 'நம்பிக்கை' விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு ஆளுமை

விளையாட்டுத் துறையில் ஆதவ் அர்ஜுனாவின் சாதனைகளுக்கு மகுடமாக அவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான கலாட்டா க்ரவுன் விருதுகள் சார்பாக 'ஆண்டின் தலைசிறந்த விளையாட்டு ஆளுமை' என்ற விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஒருங்கிணைப்பாளர்

முதலமைச்சர் விருதுகளில் அர்ஜுனா அவர்களின் தன்னிகரற்ற ஒருங்கிணைப்புத் திறனை பாராட்டி அவருக்கு தமிழ்நாடு அரசு 2019ஆம் ஆண்டுக்கான 'சிறந்த ஒருங்கிணைப்பாளர்" விருதை வழங்கியது. இந்த விருதை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.