தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2026
வில்லிவாக்கத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் இராயபுரம் பொதுக்கூட்டம்
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சிட்கோ நகர், நேரு நகர், வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர் மற்றும் பாபா நகர் ஆகிய பகுதிகளில் காலையும், திருமலை ராஜா தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாலையும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம். தொடர்ந்து, இரவு நடைபெற்ற இராயபுரம் சட்டமன்றத் தொகுதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோம்.
புகைப்படம்
வீடியோ
அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் வில்லிவாக்கத்தில் தேர்தல் பிரசாரம்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளுக்காக அவர் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கே.கே. நகர், அயனாவரம் வங்கித் தெரு, என்.எம்.கே தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலையும், புது நகர், சி.கே. நாயுடு தெரு, ரங்கப்பா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாலையும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம். தொடர்ந்து, இரவு நடைபெற்ற தெருமுனை பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோம்.
புகைப்படம்
வீடியோ
வில்லிவாக்கத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் பெரம்பூர் பொதுக்கூட்டம்
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர், அண்ணாத் தெரு, காமராஜர் தெரு மற்றும் மாதா கோவில் தெரு ஆகிய பகுதிகளில் காலை தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம். மாலை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோம்.
புகைப்படம்
வீடியோ
வில்லிவாக்கத்தில் தேர்தல் பிரசாரம்
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள செட்டித் தோட்டம், முனுசாமித் தெரு, பாளயகாரத் தெரு மற்றும் அப்பாதுரை தெரு ஆகிய பகுதிகளில் காலையும், பெரியார் சாலை ஹவுசிங் போர்டு, செல்லியம்மன் கோவில் தெரு, பட்டாச்சாரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாலையும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம்.
புகைப்படம்
வீடியோ
வில்லிவாக்கத்தில் தேர்தல் பிரசாரம்
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அகத்தியர் நகர், லக்ஷ்மிபுரம், குமாரசாமி மெயின்ரோடு, புது ஆவடி ரோடு ஆகிய பகுதிகளில் காலையிலும், அம்பேத்கர் சாலை, வில்லிவாக்கம் சந்தை, வில்லிவாக்கம் ரயில்நிலைய சாலை, ஆர்.வி. நகர், திருமலை காம்ப்ளக்ஸ், கிழக்கு மாதா தெரு மற்றும் சீயலம் தெரு ஆகிய பகுதிகளில் மாலையிலும் தேர்தல் பிரசார உரை மேற்கொண்டோம்.
புகைப்படம்
ஊடகவியலாளர்கள் சந்திப்பு & தேர்தல் பிரசாரம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்தை முடக்கும் செயல்களில் சென்னை மாநகர காவல்துறை செயல்படுவதை விளக்குவதற்காக ஊடகவியலாளர்கள் சந்திப்பை மேற்கொண்டோம். வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தந்தை பெரியார் நகர், திரு.வி.க நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம்.
புகைப்படம்
வீடியோ
வில்லிவாக்கம் தேர்தல் பிரசாரம்
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளராக வில்லிவாக்கம் 97-ஆவது வார்டுக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு மாடவீதி, வெள்ளாளர் தெரு, டான் பாஸ்க்கோ தேவாலயம், கங்கை அம்மன் கோவில், ஆதி ஆந்திரா நகர் மற்றும் தந்தை பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம்.
புகைப்படம்
வில்லிவாக்கம் தேர்தல் பிரசாரம்
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளராக வில்லிவாக்கம் 97-ஆவது வார்டுக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு மாடவீதி, வெள்ளாளர் தெரு, டான் பாஸ்க்கோ தேவாலயம், கங்கை அம்மன் கோவில், ஆதி ஆந்திரா நகர் மற்றும் தந்தை பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம்.
புகைப்படம்
தவெக வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல்
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதவிருக்கும் பயணத்தில், கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் பக்கபலத்தில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் ஆர்பரிக்கும் ஆதரவுக்கு மத்தியில் – தமிழக வெற்றிக் கழகத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தோம்.
புகைப்படம்
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மகளிர் தின விழா
தமிழ்நாட்டு மகளிரின் உரிமைகள், சுதந்திரம், பாதுகாப்பு போன்ற வளமான வருங்காலத்தை உறுதிப்படுத்தும் விதமாகக் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்த மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளின் சிறப்புகளையும், தொலைநோக்குப் பார்வைகளையும் விளக்கும் விதமாக சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்றோம்.